சொந்தங்களுக்கு…..

பணக்காரன் மகன் பியூன் வேலை பார்த்து பத்தாயிரம் சம்பாதித்தாலும் அவன் பணக்காரன், ஏழை மகன் இன்ஜினியரிங் படித்து 70 ஆயிரம் சம்பாதித்தாலும் அவன் ஏழை…

சார்…பணக்காரனுக்கு அவங்க அப்பன் வீடு கட்டி வச்சிருப்பான்,கல்யாணம் பண்ணி வச்சிருப்பான்,வாடகை இல்லாம சொந்த வீட்டிலேயே தங்க வச்சிருப்பான்… ஆனா அவனுங்கள ஒரு கூட்டம் மதிச்சுகிட்டு தெரியும். காரணம் என்னன்னா அவங்க அப்பன் சேர்த்து வைத்த சொத்து.

நம்ம அப்பனுங்க சொத்து சேர்த்து வைக்கல., காரணம் அவங்களுடைய அப்பா ( தாத்தா )சரியில்லாதவனா இருந்திருக்கலாம், கூட நாலு அக்கா தங்கச்சி பிறந்திருக்கலாம், ஒருவேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாம இருந்திருக்கலாம், ஒருவேளை சாப்பிடுவது மிகப்பெரிய விஷயமா இருந்திருக்கலாம், கூரை வீட்டை கட்டி முடிப்பதே மிகப்பெரிய விஷயமாக இருந்திருக்கலாம்,இவ்வளவு கஷ்டத்திலும் அந்த நாலு அக்கா தங்கச்சியையும் கல்யாணம் பண்ணி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கலாம், அக்கா தங்கச்சிகளை கரை சேர்த்ததுக்கு அப்புறம் திரும்பி பார்த்தா அவருக்கான வாழ்க்கை முடிந்து இருக்கலாம்.. எல்லாருக்கும் எல்லாத்தையும் செஞ்சுட்டு நிற்கும்போது பக்கத்துல பொண்டாட்டியும் பிள்ளைகளும் ஏதும் இல்லாம நிக்கிறத பார்த்து வெம்பின ஒரு அப்பாவா இருக்கலாம்.. அவ்வளவு கஷ்டத்திலும் தன்னுடைய பிள்ளைகளை படிக்க வைத்திருக்கிறார்., இப்படிப்பட்ட அப்பாவுக்கு மகனாக இருந்து பாருங்கள்…. வாழ்க்கை என்றால் என்னவென்று புரியும்…

சார் நம்ம படிச்சு முடிச்சு வெளியில வரும் போது கரெக்டா இப்படிப்பட்ட அப்பாவுக்கு அடிபட்டு இருக்கலாம், என்ன செய்றதுன்னு தெரியாம திக்கு முக்காடி நின்ன பையனுக்கு அவன் செய்யற வேலை எல்லாம் சரின்னு மட்டும் தான் தெரியும்.அதனால அவன் குடும்பம் சாப்பிடுதுனு மட்டும் தான் தெரியும்….

இது கடையில அவன் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும்,அம்மாவுக்கு தோடு வாங்கி கொடுக்கணும்,அம்மாவுக்கு கொலுசு வாங்கி கொடுக்கணும்,அம்மாவுக்கு தாலி வாங்கி கொடுக்கணும், அம்மாவுக்கு புடவை வாங்கி கொடுக்கணும், அம்மாவ நல்லபடியா பாத்துக்கணும், அம்மா சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போகும்போது கை நிறைய கழுத்து நிறைய நகை போட்டுட்டு போகணும்,அப்பாவுக்கு சட்டை வாங்கி கொடுக்கணும், அப்பாவுக்கு வேட்டி வாங்கி கொடுக்கணும், அப்பாவுக்கு மோதிரம் போட்டு அழகு பாக்கணும்,அப்பாவுக்கு நல்ல செருப்பு போட்டு அழகு பார்க்கணும்…. இனி இவங்க யார்கிட்டயும் கைய கட்டி கையை நீட்டி பணம் வாங்க விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு வைராக்கியத்தோட நீங்க நின்னு இருக்கீங்களா.?

தீபாவளிக்கு நல்ல சட்டை போடணும்,நிறைய பலகாரம் செய்யணும், உங்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே கரும்பு வேண்டும், பிறந்தநாள்னா பெருசா கொண்டாடணும், நம்ம சுத்தி இருக்க எல்லாருக்கும் நிறைய செய்யணும் இப்படி நிறைய இருக்கு…

தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும், ஒரே ஒரு பவுன் நகையோடு கல்யாணத்தை ஸ்டார்ட் பண்ணி இருக்கீங்களா, கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷத்துக்குள்ள பத்து பவுன் நகை, கல்யாணத்துக்கு அன்னைக்கு பொண்ணு வீட்டுக்கு போறதுக்குள்ள ஒன்றரை லட்ச ரூபாய்க்கு சாமான் செட்டு எல்லாம் எடுத்து வைக்கணும், அடுத்த ஒரு வருஷத்துக்கு தீபாவளி சீர், பொங்கல் சீறு l,கறி விருந்து,கல்யாண விருந்து, மாப்பிள்ள விருந்து மச்சின விருந்து, பிரசவம் பாக்குறது,பிள்ளைக்கு பெயர் வைக்கிறது,இந்த பிள்ளைக்கு முடியலன்னா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறது, எல்லாத்தையும் முடிச்சுட்டு நிம்மதியா ஒரு நாள் இருந்து இருக்கீங்களா சார்…

அதுக்கு அடுத்த வருஷமே உங்களுக்குன்னு நீங்களே கல்யாணம் பண்ணி பார்த்து இருக்கீங்களா சார்… எட்டு லட்ச ரூபாய் கடனோட மறுபடி நம்ம கல்யாண கடன் எல்லாம் சேர்ந்து பத்து லட்ச ரூபா கடனோட கல்யாணம் பண்ணி இருக்கீங்களா, கல்யாணம் பண்ண நினைவு இல்லாமல் கடன் கட்ட ஓடி இருக்கீங்களா..? கல்யாணம் பண்ணி பொண்டாட்டி கூட பேச நேரமில்லாமலும் குழந்தைகள் கூட நேரம் ஒதுக்க முடியாமலும் தவிச்சு இருக்கீங்களா.…..

இதுல ஒரு 10% நீங்க அனுபவிச்சு இருந்தாலும் நீங்க மத்தவங்கள பத்தி பேசலாம் சார்.. இதுல ஒண்ணுமே நான் பார்த்ததில்லை அப்படின்னா வாய மூடிட்டு எல்லாத்தையும் மூடிகிட்டு அமைதியா உங்கள் மரியாதையை காப்பாற்றிக் கொள்வது மிகவும் நல்லது.  

போன தலைமுறை அப்பா அம்மாக்கள் எல்லாரையும் எல்லார்கிட்டயும் நல்லபடியா இருந்து உங்களுடைய வாழ்க்கையை நல்லபடியா அமைச்சுக்கிட்டீங்க.. ஆனா இந்த தலைமுறையை மட்டும் கைக்குள்ளேயே வச்சுக்கிட்டு அவன் கிட்ட சேராத இவங்கிட்ட சேராத அவன் கெட்டவன் இவன் நல்லவன் சொல்லி சொல்லி எங்க தலைமுறையை வீணாக்கன நல்ல சொந்தக்காரங்களுக்கு நன்றி

இது யாருக்குனா – குறிப்பா நம்ம பேசிட்டு இங்கிட்டு வந்த உடனே நம்மள பத்தி நக்கல் அடிச்சு பேசுற நல்ல சொந்தக்காரங்களுக்கு…. சார் நீங்க நக்கல் அடிக்கிறீங்கன்னு தெரிஞ்சும் மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டே கொஞ்சம் கஷ்டப்பட்டுக்கிட்டே என்ன பத்தி என்ன வேணா நினைச்சுக்கோங்க டா…. இன்னும் கொஞ்ச நாள் தான் உங்களை விட பத்து மடங்கு பெருசா நான் வளருவேன் … ஆனா நீங்க எனக்கு செஞ்ச எல்லாத்தையும் நான் உங்களுக்கு திருப்பி செய்ய மாட்டேன்… நீங்க வருத்தப்பட அளவுக்கு… போங்கடா டேய் போங்கடா….. நீங்களும் உங்க சொந்தமும்..

Leave a Reply