வணக்கம் நண்பர்களே உங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். subscribe Here👇
இந்த பதிவில் நாம் சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் என்னும் சிப்காட் இருக்கு அருகில் அமைந்துள்ள வாரணவாசி எனும் இடத்தில் புதியதாக திறக்கப்பட போகும் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் உள்ள வேலை வாய்ப்பு பற்றி தான் பார்க்க போகின்றோம்.
நிறுவனத்தைப் பொறுத்தவரை ஆண் பெண் என இருபாலரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் திருமணமான பெண்களாக இருந்தாலும் திருமணமான ஆண்களாக இருந்தாலும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.
உங்களுக்கான கல்வித் தகுதியை பொருத்தவரை பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தொழிற் பயிற்சி முடித்தவர்கள் டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகளில் நீங்கள் தேர்ச்சி பெற்ற நபராக இருந்தாலும் அல்லது தேர்ச்சி பெறாதவராக இருந்தாலும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.. இதில் குறிப்பாக கல்லூரிக்கு சென்று படிப்பை தொடர முடியாமல் பாதியிலேயே படிப்பை கைவிட்டவர்களும் விண்ணப்பித்து பயனடையலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
எந்த ஒரு செல்போன் தயாரிக்கும் நிறுவனமும் தற்பொழுது ஆண்களை அதிகளவில் தேர்ந்தெடுப்பதில்லை ஆனால் இந்த நிறுவனத்தில் ஆண்களும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது இந்த நிறுவனத்தின் ஒரு தனி சிறப்பாகும்.
உங்களுக்கான வயது வரம்பாக 18 வயது முதல் 28 வயது வரை உடையவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 18 வயதுக்கு கீழே உள்ளவர்களும் 28 வயதுக்கு மேலே உள்ளவர்களும் விண்ணப்பிக்க இயலாது குறிப்பிட்ட வயது வரம்பு உடைய நபர்கள் மட்டும் விண்ணப்பித்து உங்களுக்கான வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனமானது உங்களை உற்பத்தி துறை சரி பார்க்கும் துறை மற்றும் இதர பல துறைகளில் வேலை வாய்ப்புகளை கொடுக்க தயாராக உள்ளது நீங்கள் ஏற்கனவே அனுபவம் உடைய ஒரு நபராக இருந்தாலும் அல்லது கல்லூரி படிப்பையோ அல்லது பள்ளி படிப்பையோ தற்போதைய காலங்களில் முடித்தவராக இருந்தாலும் உடனடியாக நீங்கள் இணைந்து கொள்ளலாம் உங்களுக்கான சரியான பயிற்சியை கொடுத்து பயிற்சி காலத்தில் உங்களுக்கான வருமானத்தையும் கொடுத்து உங்களை நேரடியாக நிறுவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள்.
மாத ஊதியமாக 17 ஆயிரம் ரூபாய் முதல் 19 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் மேலும் இதில் அனைத்து விதமான அரசு சலுகை மற்றும் வருகை பதிவேடு ஊக்க தகைகள் மற்றும் ஓவர் டைம் என அழைக்கப்படும் ஊக்கத்தொகைகளும் வழங்கப்படும் அது மட்டுமல்லாமல் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை ஒட்டி போனஸ் வழங்கப்படும்.
கொடுக்கப்பட்ட இந்த வேலை வாய்ப்பானது காண்ட்ராக்ட் முறை அடிப்படையிலான வேலை வாய்ப்பு மட்டுமே.. இந்த வேலை வாய்ப்பானது நிரந்தர வேலை வாய்ப்பு அல்ல. நீங்கள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொள்ளலாம் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஆனால் நிறுவனத்தின் நேரடி பணியாளராக உங்களை ஒருபோதும் இதில் தேர்வு செய்ய மாட்டார்கள்.
நிறுவன விதிகளின்படி 8 மணி நேர வேலை மற்றும் சுழற்சி முறை அடிப்படையிலான வேலைவாய்ப்பை மட்டுமே நிறுவனம் வழங்குகிறது. எட்டு மணி நேர வேலை முடிந்து அதிகபட்ச நேர வேலை பார்க்கும் நபர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த அதிகபட்ச வேலை நேரமானது உங்களுக்கான ஊதியத்தை ஒரு படி உயர்த்தி கொடுக்கும்.
நிறுவனத்திற்கு நேரடி நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டும் குறிப்பாக உங்களுடைய அடையாள அட்டை கல்வித் தகுதி சான்றிதழ்கள் மற்றும் உங்களுடைய புகைப்படங்களை நீங்கள் கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்.
அதாவது உங்களுடைய அடையாள அட்டையான ஆதார் அட்டை மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ்களான பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பை முடித்ததற்கான சான்றிதழ்களின் நகல்கள் மட்டும் உண்மையான சான்றிதழ்களை நீங்கள் கண்டிப்பாக நிறுவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் உண்மையான சான்றிதழ்கள் அனைத்தும் நிறுவனத்தால் சரிபார்ப்புக்காக மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும் இந்த சரிபார்ப்பை நிறுவனம் உங்களிடம் முடித்துவிட்டு நேரடியாக உங்களுடைய உண்மைச் சான்றிதழ்களை உங்களிடமே ஒப்படைத்து விடுவார்கள்.
ஒவ்வொரு தேர்விற்கும் செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய புகைப்படங்கள் மூன்று முதல் பத்து புகைப்படங்களை கண்டிப்பாக கொண்டு செல்லுங்கள் நிறுவனத்திற்கு தகுந்தார் போல புகைப்படங்களின் எண்ணிக்கையும் மாறுபடும்.
மேலும் நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக சாதாரண உடை அணிந்து மட்டுமே செல்ல வேண்டும் டி-ஷர்ட் ஜீன்ஸ் போன்ற நவநாகரீக உடைகளை அணிந்து செல்ல வேண்டாம். இது உங்கள் மீதுள்ள மதிப்பினை கணிசமாக குறைத்துவிடும் எனவே சாதாரண உடைகளை நல்ல முறையில் அணிந்து கொண்டு கருப்பு நிற ஷூ அணிந்து செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனத்தில் நேரடி வேலை வாய்ப்பு என்பதால் எந்த ஒரு தனி நபருக்கும் தனி நிறுவனத்திற்கும் நீங்கள் பணம் செலுத்தி வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை நாம் கொடுக்கப்படும் இந்த அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் கண்டிப்பாக முற்றிலும் இலவசமான ஒன்றாகும். இன்றைய காலகட்டத்தில் அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் சமூக வலைதளங்களில் பறவை கிடைக்கின்றன ஆனால் எந்த வேலை வாய்ப்பு சரியானது என்பதை நீங்கள் முதலில் தெளிவாக முடிவு செய்து கொள்ள வேண்டும் எந்த ஒரு நிறுவனம் அல்லது தனி நபர் உங்களிடம் பணம் கேட்டால் கண்டிப்பாக அந்த வேலை வாய்ப்பு என்பது முற்றிலும் தவறானது மற்றும் சரியான வேலை வாய்ப்பாக இருக்காது என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னரே நீங்கள் நேரடியாக நிறுவனத்திற்கு சென்று வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். சரியான முறையில் விசாரிக்காமல் நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது உங்களுடைய பணத்தையும் நேரத்தையும் நீங்கள் வீணடிக்க நேரிடும்.
இதுபோன்ற தொடர்ச்சியான நல்ல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள நம்முடைய telegram மற்றும் வாட்ஸ் அப் சேனலில் இணைந்து பயனடைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் வீடியோக்கள் மற்றும் இணையதள பதிவுகளில் கொடுக்கப்படும் வேலைவாய்ப்புகள் மட்டுமல்லாமல் அனைத்து விதமான வேலை வாய்ப்பு தகவல்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ள நமது மற்ற சமூக வலைதள பக்கங்களில் கொடுக்கப்பட்டு வருகிறது.
Telegram Link : https://t.me/Jobstamizhanchannel
நிறுவனமானது பல இடங்களில் தனது கிளைகளை கொண்டுள்ளதால் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு முதலில் கால் செய்து நாம் சொல்லப்பட்ட விவரங்கள் மட்டுமல்லாமல் மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு சரியான முறையில் அனைத்து அவளையும் கேட்டுக் கொண்டு மட்டுமே நீங்கள் நிறுவனத்திற்கு வேலை வாய்ப்பு செல்ல வேண்டும் ஏனெனில் பல கிளைகள் உள்ளதால் எந்த கிளையில் உங்களுக்கு வேலைவாய்ப்பு அல்லது நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது என்பதை தெரியாமல் நீங்கள் சென்றால் அதற்கு எந்த வகையிலும் நிறுவனம் பொறுப்பேற்காது.
வேலை செய்யும் நேரத்தில் உங்களுக்கான உணவானது இலவசமாக நிறுவனத்தால் வழங்கப்படும் வேலை நேரத்திற்கு தகுந்த போல ஒருவேளை அல்லது இரண்டு வேலை உணவு வழங்கப்படும் என நிறுவனத்தின் சார்பில விதிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கான போக்குவரத்து வசதியானது நிறுவனத்தில் இருந்து பத்து முதல் 50 கிலோ மட்டர்கள் வரை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நீங்கள் வெளியூர் நபராக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக உங்களுக்கான தங்குமிட வசதியை நிறுவனம் குறைந்த பொருட்செலவில் ஏற்பாடு செய்து தருவார்கள் அதற்கான அட்வான்ஸ் தொகை மற்றும் மாத வாடகை இரண்டையும் நீங்களே செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நிறுவனத்தில் போக்குவரத்து வசதி உள்ள குறிப்பிட்ட இடங்களில் உங்களது தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து கொண்டால் நிறுவனத்திற்கு சென்றுவர மிகவும் ஏதுவாக இருக்கும்
நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசியின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு உடனடியாக விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளுங்கள்.
உங்கள் நேரம் தவறி அல்லது இந்த குறிப்பிட்ட நேரம் அல்லாமல் மற்ற நேரங்களில் தொடர்பு கொள்ளும் பொழுது கண்டிப்பாக அவர்களால் பதில் அளிக்க இயலாது எனவே சிறிது நேரம் பொறுமை காக்கவும். கண்டிப்பாக அவர்களிடமிருந்து பதில் உங்களுக்கு கூடிய விரைவில் கிடைக்கும். அல்லது உடனடியாக பதில் கிடைக்காமல் போனால் இந்த கொடுக்கப்பட்டுள்ள எண்ணானது வாட்ஸ் அப்பில் கண்டிப்பாக இருக்கும் கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்களுடைய சுயவிவர படிவத்தை அனுப்பி உங்கள் நிறுவனத்தின் வேலை வாய்ப்பு பதிவை நாங்கள் இணையதளத்தில் கண்டோம். இந்த நிறுவனத்தில் இப்பொழுதும் வேலை வாய்ப்புகள் உள்ளனவா என்று கேட்டு தெரிந்து கொண்டு நீங்கள் பேச்சை திறந்தால் கண்டிப்பாக உங்களுக்கு சரியான முறையில் பதில் அளிப்பார்கள்.
Mobile Number : 9080511548 / 8610503485
நேர்முகத் தேர்வானது ஏப்ரல் மாதம் முழுவதும் நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலை எட்டு மணி முதல் 10 மணி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. அந்த குறிப்பிட்ட நேரங்களில் நேரடியாக சென்று நேர்முகத்தர்வு எதிர்கொள்ளுங்கள்.
நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலக முகவரி மற்றும் இதல பல விவரங்கள் நமக்கு வழங்கப்படவில்லை எனவே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு மட்டுமே நீங்கள் இந்த வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள முடியும்.
வாய்ப்புகளைப் பொறுத்தவரை நீங்கள் எந்த ஒரு துறையை முதலில் தேர்ந்தெடுத்து செல்கிறீர்களோ அந்தத் துறையில் குறைந்தபட்சம் ஐந்து முதல் பத்து வருட அனுபவங்களை சேர்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றுவதால் எந்த உபயோகமும் இல்லை. ஒரே துறையை தேர்ந்தெடுத்து அந்தத் துறையில் உங்களுக்கான திறமையை வளர்த்துக் கொண்டு உங்களுக்கான மதிப்பாய்வை வேறொரு நிறுவனத்தில் நேர்முகத் தேர்வு எதிர்கொள்ளும் பொழுது தானாக தெரியும் படி பார்த்துக் கொள்ளவும். பதிவிடப்படும் அனைத்து பதிவுகளிலும் உங்களுக்கான சிறிய உபயோகமான சில கருத்துக்கள் கண்டிப்பாக இருக்கும் எனவே பதிவை முழுமையாக படித்து உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே..!
நீங்கள் எவ்வளவு அதிகமாக கற்றுக் கொள்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக உங்களுடைய வருமானமும் திறமையும் அதிகரிக்கும் என்பதில் விதமான மாற்று கருத்துக்களும் இல்லை
இது போன்ற பதிவுகளை நீங்களும் உபயோகப்படுத்திக் கொண்டு உங்கள் பகுதிகளில் வேலை தேடும் நபர்களுக்கு இந்த பதிவுகளை ஷேர் செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.