Iron Man of Indian Cinema | Mr.Vijayakanth

கையில் இரும்பு கம்பி..! ஒரே ஆள்… பெங்களூருவில் வாட்டாள் நாகராஜன் பயந்து ஓடிய சம்பவம் – விஜயகாந்த் எனும் இரும்பு மனிதனின் சம்பவம்…!

படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் எத்தனை பேர் வந்தாலும் நேருக்கு நேர் நின்று அடித்து விரட்டக்கூடிய திறமை கொண்டவர் விஜயகாந்த்..

கர்நாடக மாநிலத்தில் படப்பிடிப்பின் போது பிரச்சனை செய்ய வந்த ரவுடிகளை ஒற்றைய ஆளாக நின்று விஜயகாந்த் விரட்டிய சம்பவத்தை இயக்குனரும் எழுத்தாளருமான ரத்தினகுமார் கூறியுள்ளார்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக விஜயகாந்த் வலம் வந்த காலங்களில் ஷூட்டிங்கில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவளிக்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்த இவர் பலருக்கும் உதவிகளை செய்துள்ளார்.

பலரும் விஜயகாந்தின் சாகசங்களை பகிர்ந்து வரும் இந்த நிலையில் இயக்குனர் ரத்தினகுமார் கூறிய சிறிய சம்பவம் இது..

விஜயகாந்த் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தமிழ்ச்செல்வன். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் ரோஜா மணிவண்ணன் விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வந்தது. முதலில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு பின்னர் அடுத்த நாள் ஷூட்டிங்கிற்காக ஒரு கெஸ்ட் ஹவுஸில் நாங்கள் தங்கி இருந்தோம்.

https://jobstamizhan.in/hcl-recruitment-2024-apply-now/

அப்போது காவிரி பிரச்சனை சம்பந்தமாக விஜயகாந்த் கூறிய ஒரு கருத்து சர்ச்சைக்குரியதாக இருந்ததால் விஜயகாந்தின் பட சூட்டிங் இங்கு நடைபெறுகிறது என்று தெரிந்தவுடன் அங்கு 50க்கும் மேற்பட்ட நபர்களுடன் வாட்டால் நாகராஜ் எனும் நபர் அங்கு வந்து அந்த கெஸ்ட் ஹவுஸ் சுற்றி வளைத்துக் கொண்டார். தமிழ்ச்செல்வன் என்னும் பெயரில் இங்கு படப்பிடிப்பு எல்லாம் நடத்தக்கூடாது என்று கோஷம் போட்டுள்ளனர். இதைப் பார்த்த இயக்குனர் இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் என்று ரூமுக்கு சென்று விட்டார்.

ஆனால் விஜயகாந்த் அப்படிச் செல்லவில்லை தனது டிரைவரை அழைத்து கார் டிக்கியை திறக்குமாறு கூறி அதிலிருந்து இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டு ‘என்னடா உங்களுக்கு பிரச்சனை’ என்று கேட்டுக் கொண்டு கெஸ்ட் ஹவுஸ்சை நோக்கி நடந்தார்.

அங்கு சென்றவுடன் அவர்கள் அதிகமாக கோஷம் இடவும் விஜயகாந்த் அவர்கள் அவர்களை மதுரை தமிழில் அவர்களை மிரட்டி அங்கிருந்து ஓடச் செய்துள்ளார். பின்னர் இயக்குனர் அவர்கள் “இல்லை இனிமேல் தமிழ்ச்செல்வன் என்ற பெயரில் நான் கிளாப் அடிக்க மாட்டேன்” என்று சொல்லவும், விஜயகாந்த் அதெல்லாம் ஒன்றுமில்லை – தைரியமாக இரு – நான் பார்த்துக்கிறேன் என்று கூறி தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த உதவினார்.

அதன் பின்னர் தான் படப்பிடிப்பை தொடங்குவதாக இயக்குனர் உத்தரவாதம் மதித்து படத்தை முடித்ததாக இயக்குனர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply