PMJDY : If you need money you will get 10000 m

உங்கள் சேமிப்பு கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பத்தாயிரம் ரூபாய் வரை பணம் எடுக்கலாம்.

இந்த வசதியை பெற உங்களிடம் ஜன்தன் கணக்கு இருக்க வேண்டும். 2017 ஆம் ஆண்டு மோடி அரசால் ஜன் தன் கணக்கு தொடங்கப்பட்டது.

https://jobstamizhan.in/index.php/2023/12/02/kocon-is-hiring-nowapply-soon/
kocon Recruitment 2023

பிரதம மந்திரி ஜந்தன் கணக்கை உங்கள் அருகில் உள்ள வங்கிகளில் தொடங்கினால் இலவச காசோலை / விபத்து காப்பீடு / வங்கி கணக்கு / ஏடிஎம் வசதி மற்றும் இதர பல வசதிகளும் வழங்கப்படும்.

இதற்கெல்லாம் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு ஓவர் டிராப்ட் வசதியும் வழங்கப்படுகிறது. அதன் உதவியுடன் உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் இந்த அடிப்படையில் பத்தாயிரம் ரூபாய் வரை நீங்கள் உங்களுடைய தேவைகளுக்கு பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

பிரதம மந்திரி ஜந்தன் திட்டத்தின் கீழ் வங்கி கணக்குகள் தொடங்கப்படுகின்றன. இந்த வங்கி கணக்குகளுக்கு நீங்கள் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த கணக்கை நீங்கள் தொடங்குவதால் காப்பீடு உள்ளிட்ட பல வசதிகள் அரசால் வழங்கப்படுகிறது.

ஜீரோ பேலன்ஸ் வசதியுடன் தொடங்கப்படும் இந்த கணக்கானது ஓய்வூதிய தொகை சேமிப்பு கணக்கு மற்றும் இதர பல அரசின் திட்டங்கள் பெறுவதற்கான எளிதான முறையாக உள்ளது.

இந்த கணக்குகளின் மூலம் நீங்கள் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை ஓவர் டிராப் முறையில் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும் இது குறைந்த கால கடன் அடிப்படையில் நேரடியாக அரசின் மூலம் வழங்கப்படுகிறது.

இதற்கான அடிப்படை தகுதியாக நீங்கள் ஜந்தன் கணக்கு தொடங்கி குறைந்தபட்சம் ஆறு மாதம் ஆகியிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை கணக்கு தொடங்கி ஆறு மாதம் ஆகவில்லை என்றால் 2000 ரூபாய் வரை மட்டுமே நீங்கள் எடுத்துக் கொள்ள முடியும் இதற்கான வயது வரம்பாக 65 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓவர் டிராப்ட் முறையானது சிறு குரு வணிகர்களுக்கும் குறைந்தபட்ச வருமானம் வேண்டும் அவர்களின் உடனடி தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வதற்கும் மிகவும் முக்கியமாக உதவுகிறது. இந்த முறையில் நீங்கள் பணம் பெறுவதற்கு மிகக் குறைந்த அளவு வட்டியை வங்கிக்க செலுத்துவது முக்கியமாகும். மூலம் குறைந்த வருமானம் உள்ள நபர்கள் யாரிடமும் உடனடித் தேவைகளுக்கு கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

எப்படி தொடங்க வேண்டும் ? https://jobstamizhan.in/index.php/2023/12/02/kocon-is-hiring-nowapply-soon/

வங்கிக் கணக்கை தொடங்குவதற்கு உங்களுக்கு ஆதார் அட்டையும் பான் கார்டும் இருந்தால் மட்டுமே போதுமானது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை மேலும் உங்களிடம் வேறு ஏதேனும் பழைய வங்கி கணக்குகள் இருந்தால் அதனையும் ஜன்தன் கணக்காக மாற்ற முடியும்.

இந்த கணக்கை தொடங்குவதன் மூலம் உங்களுக்கு ஏடிஎம் கார்டு / 30 ஆயிரம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு / இரண்டு லட்சம் ரூபாய் காண விபத்து காப்பீடு / மேலும் நீங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு வட்டியும் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாக நீங்கள் இந்த கணக்கை எந்த ஒரு வங்கிகளும் நீங்கள் தொடங்கிக் கொள்ளலாம்.

இது போன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற நமது வெப்சைட்டை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் நமது டெலிகிராம் குழுவில் இணைந்து கொள்ளவும். https://t.me/Jobstamizhanchannel

One thought on “PMJDY : If you need money you will get 10000 m

Leave a Reply